மீன்வளம்,மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் இணைந்து ஒவ்வொரு வருடமும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து இந்திய குடிமை பணிக்கான போட்டி தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பயிற்சி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய குடிமை பணிக்கான போட்டி தேர்வுக்கு ஆயத்த பயிற்சி அளிக்கப்படுகின்றது.
இந்த திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு மீன்வள உதவி இயக்குனர் அலுவலகம், மேட்டூர் அணை பூங்கா எதிரில், கொளத்தூர் சாலை மேட்டூர் அணை 636401 என்ற முகவரியில் அல்லது 04298244045 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.