டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை பிரதமர் நரேந்திர மோடி திடீரென சந்தித்து பேசியுள்ளார். உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் அங்கு போர் பதற்றம் நிலவி வருகிறது. மேலும் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்தியர்களை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், இந்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்தும் குடியரசுத் தலைவரிடம் பிரதமர் நரேந்திர மோடி எடுத்துக் கூறினார். உக்ரைனுக்கு மனிதாபிமான முறையில் மருந்துகள் வழங்க உள்ளது பற்றியும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.