Categories
மாநில செய்திகள்

குடியரசுத் தலைவரின் வாழ்த்து செய்தி…. தமிழ்நாட்டில் இருந்து பிரிந்த மாநிலங்கள்…. இதுதான் காரணமா….?

இந்தியா சுதந்திரத்தின் போது பல்வேறு மகாணங்களாக ஒருங்கிணைந்து இருந்தது. இதையடுத்து மொழி அடிப்படையில் இந்தியாவின் பல மாகாணங்கள் பிரிக்க முடிவு செய்து 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி இந்தியாவின் மாகாணங்களை மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. அதில் சென்னை மாகாணம் பிரிக்கப்பட்டு ஆந்திர பிரதேஷ், கேரளா மற்றும் கர்நாடகா போன்ற பல புதிய மாநிலங்கள் பிறந்தது. அதன் பிறகு சென்னை மாகாணம் என்ற பெயரிலேயே நமது மாநிலம் செயல்பட்டு வந்த நிலையில் சென்னை மாகாணத்தின் பெயரை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வந்தது. இதற்கு தியாகி சங்கரலிங்கனார் உண்ணா விரத நோன்பிருந்து உயிரிழந்தார்.

இதையடுத்து 1976 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த அறிஞர் அண்ணா ஜூலை 18ஆம் தேதி சென்னை என்ற பெயரை தமிழ்நாடு என்று அழைக்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் இன்று மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட நாளை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் கொண்டாடி  வருகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை அரசு ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு தினமாக அறிவித்ததால் அதிகாரப்பூர்வமான கொண்டாட்டங்கள் ஏதுமில்லை. ஆனால் பாஜக,பாமக மற்றும் நாம் தமிழர் போன்ற கட்சிகள் தமிழ்நாடு தினமாக இன்று  அறிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் மொழிவாரி மாநிலப் பிரிவு குறித்து வாழ்த்து செய்தி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ளார். அதில் “புதிய மாநில பிரிவு தினத்தை கொண்டாடிவரும் ஆந்திரப் பிரதேசம், சட்டிஸ்கர், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், பஞ்சாப், லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச மக்களுக்கு சிறந்த எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர் வெளியிடும் வாழ்த்துச் செய்தியில் தமிழ்நாடு இடம் பெறாது. இதற்கு தமிழ்நாட்டில் இருந்துதான் பல மாநிலங்கள் பிரிந்தன என்பதால் தமிழ்நாடு புதிய மாநிலமாக கருதப் படவில்லை என்பதை காரணமாக பலர் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |