Categories
மாநில செய்திகள்

குடியரசுத் தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்…. பரிசளித்த 7 புத்தகங்கள் இதுதான்…!!!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு முதல்வர் மு க ஸ்டாலின் ஏழு புத்தகங்களை பரிசாக வழங்கினார். அவை என்னென்ன என்பதைப் பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று சட்டமன்ற நூற்றாண்டு விழாவும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்பு விழாவும் மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது. நேற்று நடைபெற்ற திறப்பு விழா நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார். இந்த விழாவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதியின் உருவப்படத்தை ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

அந்தத் திருவுருவப் படத்திற்கு கீழே “காலம் பொன் போன்றது. கடமை கண் போன்றது” என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. இதைதொடர்ந்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு நினைவு பரிசாக ஏழு புத்தகங்களை வழங்கினார்.

அந்தப் புத்தகங்கள் பின்வருபவை:
1. திருக்குறள்
2. சி சு. செல்லப்பாவின்-  வாடிவாசல்
3. கி. ராவின் – கரிசல் கதைகள்
4. ராஜம் கிருஷ்ணனின்- சுழலில் மிதக்கும் தீபங்கள்
5. நீல.பத்மநாபனின் – தலைமுறைகள்
6. தி.ஜானகிராமன் – செம்பருத்தி
7. கே.ராஜன் எழுதிய – பண்டைய எழுத்து முறை
போன்ற பதிப்புகள் ஆகும்.

Categories

Tech |