குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு முதல்வர் முக ஸ்டாலின் நினைவு பரிசை வழங்கியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று சட்டமன்ற நூற்றாண்டு விழாவும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்பு விழா மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இன்று திறப்பு விழா நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டார். அதுமட்டுமில்லாமல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதியின் உருவப்படத்தை அவர் திறந்து வைத்தார்.
அந்தத் திருவுருவப் படத்திற்கு கீழே “காலம் பொன் போன்றது. கடமை கண் போன்றது” என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடியரசு தலைவர் மற்றும் ஆளுநர் ஆகியோருக்கு முதல்வர் முக ஸ்டாலின் நினைவுப்பரிசு வழங்கினார். கே ராஜன் எழுதிய பண்டைய எழுத்துமுறை நூலின் மொழியாக்கத்தை ஜனாதிபதியுடன் முதல்வர் வழங்கினார். மேலும் தமிழக சட்டமன்றத்தின் மாதிரியை குடியரசுத் தலைவர், ஆளுநர் இருவருக்கும் ஸ்டாலின் வழங்கினார்.