குடியரசுத் தலைவராக போட்டியிடும் வேட்பாளர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு துணைத் தலைவராக இருக்கும் வெங்கையா நாயுடு குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் இவரை சந்தித்து மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, பா.ஜ.க தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாகத்தான் பா.ஜ.க சார்பில் குடியரசுத் தலைவர் போட்டிக்கு வெங்கையா நாயுடு வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.