நாடு முழுவதும் குடியரசு தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் குடியரசு. தினத்தை முன்னிட்டு முக்கிய கட்டிடங்கள் யாவும் அழகான வண்ணமயமான மின்விளக்குகளால் மின்னியது.
டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் சௌத் பிளாக், நார்த் பிளாக், குடியரசுத் தலைவர் மாளிகை, சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், பீகாரின் பாட்னாவில் உள்ள தலைமை செயலகம், மத்திய பிரதேசம் போபாலில் சட்டமன்ற கட்டிடம், மும்பையின் கேட்வே ஆப் இந்தியா போன்ற மிக முக்கியமான கட்டடங்கள் அனைத்தும் வண்ணமயமாக மின்னின.
கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகை, அசாம் மாநில தலைநகரான கௌகாத்தி உயர் நீதிமன்ற கட்டடம், காவல் தலைமை அலுவலகம், பஞ்சாப் மாநில அட்டாரி எல்லைப்பகுதி, ஜனதா பவன் போன்றவையும் வண்ணமயமாய் காட்சியளித்தன.
இதைப் பார்க்கும் அனைவருக்கும் மகிழ்ச்சி ஏற்பட்டதாக கூறியுள்ளார்.