முதல் அம்சம் ‘நாம் ஏன் இந்த குடியரசு தின விழாவை கொண்டாட போகிறோம்? என்று தெரிந்து கொள்ள வேண்டும். சில விஷயங்களாவது நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதில் முதல் விஷயம் நாம் இந்தியர்கள் இந்தியர்களுக்காகவே உருவாக்கிய ஒரு அரசியல் சாசனம் ஜனவரி 26 ஆம் நாள் 1950 இல் நடைமுறைக்கு வந்தது. இதுவே குடியரசு தினத்திற்கான முதல் காரணம்.
இரண்டாவது இந்த அரசியல் சாசனம் உலகில் மிகப்பெரிய அரசியல் சாசனம் என்று போற்றக் கூடியது .
மூன்றாவது இந்திய நாடு முழுவது பிரிட்டிஷ் நாட்டின் பிடியிலிருந்து உருவாக்கப்பட்டு தனக்கென தனி மனித உரிமைக்காக உருவாக்கப்பட்ட ஆவணம். ஒரு தனி மனிதனுக்காக எந்த ஆவணமும் எழுதப்படவில்லை. இதுவே ஒரு முதல் ஆவணமாகும் .
நான்காவது நம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் ஆவார்.
குடியரசு தினத்தன்று முப்படை வீரர்களின் அணிவகுப்பு நடக்கும். முப்படை வீரர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கென பதக்கங்களும் , பாராட்டுக்களும் நம் குடியரசுத் தலைவர் நிகழ்த்துவார். பின்னர் மாநிலங்கள் வாரியாக அந்தந்த மாநிலத்தின் சிறப்பினை எடுத்துக்காட்டும் வகையில் அணிவகுப்பு நடக்கும். இதுவே குடியரசு தினத்தன்று நடைபெறும் நிகழ்வுகள்.