50 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறையாக வெளிநாட்டுத் தலைவர்கள் யாரும் குடியரசு தின விழாவில் பங்கேற்கவில்லை. நாட்டின் 72 வது குடியரசு தின விழா இன்று ராஜபாதையில் நடைபெறும் விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அணிவகுப்பில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து செங்கோட்டை வரை நடைபெறும் அணிவகுப்பு இந்த ஆண்டு நேஷனல் ஸ்டேடியம் வரை மட்டுமே செல்லும் அணிவகுப்பில் பங்கேற்கும் பாதுகாப்பு படை வீரர்கள் முகக் கவசம் அணியவும் சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு படியிலும் 144 வீரர்கள் பங்கேற்கும் சூழலில் இந்த ஆண்டு 96 பேர் மட்டுமே கலந்து கொள்கின்றனர். இதேபோல கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கப்ப வர்களின் எண்ணிக்கை 600 லிருந்து 400 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களின் எண்ணிக்கை 25 ஆயிரமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. வங்கதேசம் விடுதலை அடைந்ததன் 50ஆவது ஆண்டு விழாவையொட்டி அந்நாட்டின் பாதுகாப்பு படை வீரர்கள் 122 பேர் அணிவகுப்பில் கலந்து கொள்கின்றனர். இந்திய விமானப் படை சார்பில் நடைபெறும் சாகசத்தில் இரண்டு ரஃபேல் போர் விமானங்கள் சுகோய் விமானங்களும் பங்கேற்கின்றன.
உத்தர பிரதேச மாநில அரசு சார்பில் ராமர் கோயில் குறித்த அலங்கார ஊர்தியும் உயிரி தொழில்நுட்பவியல் துறை சார்பில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு குறித்த அலங்கார ஊர்தியும் பங்கேற்கின்றனர். முதல்முறையாக சிஆர்பிஎப் சார்பில் அலங்கார ஊர்தி அணிவகுப்பை அலங்கரிக்க உள்ளது. அந்தமான் நிக்கோபார் படைப் பிரிவினரும் நாட்டின் முதல் போர் விமான பெண் ஓட்டுநரும் அணிவகுப்பில் கலந்து கொள்கின்றனர். லடாக் திறப்பில் அலங்கார ஊர்தி பங்கேற்கும் நிலையில் முன்னாள் ராணுவ வீரர்கள் அணிவகுப்பு மற்றும் மோட்டார் சைக்கிள் சாகசம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
இந்த ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக வெளிநாட்டு தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. பிரிட்டன் பிரதமர் பங்கேற்க இருந்த நிலையில் கொரோனா பாதிப்பால் அவரது வருகை ரத்து செய்யப்பட்டது. சென்னையில் இன்று கடற்கரை காமராஜர் சாலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். இதனை முன்னிட்டு சென்னையில் 20 ஆயிரம் போலீசார் உட்பட தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில் நிலையங்கள் உட்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.