குடியரசு தினவிழாவில் தமிழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி அளிக்காததை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குடியரசு தின விழாவில் டெல்லியில் நடைபெற்றவுள்ள அலங்கார அணிவகுப்பில் தமிழகம் சார்பில் வ.உ.சி., வேலுநாச்சியார் ஆகியோரின் சிறப்புகள் அடங்கிய அலங்கார ஊர்தி ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால் மத்திய அரசு அதற்கு அனுமதி மறுத்ததை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பியதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.