Categories
தேசிய செய்திகள்

குடியரசு தின வரலாற்றில்… போர் விமானத்தை இயக்கி சாதனை படைத்த பெண்… குவியும் பாராட்டு…!!!

டெல்லியில் குடியரசு தின வரலாற்றில் முதன் முறையாக பெண் விமானி போர் விமானத்தை இயக்கி சாதனை படைத்துள்ளார்.

டெல்லியில் நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு, கோலாகலமாக குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. அங்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அப்போது குடியரசு தின வரலாற்றில் முதன்முறையாக பாவனா காந்த் என்ற பெண் விமானி, விமானப்படையின் போர் விமானத்தை இயக்கி சாதனை படைத்துள்ளார். 2016 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையின் போர் விமானியாக பொறுப்பேற்ற பாவனா. இந்தியாவின் பலத்தை பறை சாற்றும் வகையில் நடந்த முப்படைகள் அணிவகுப்பில் போர் விமானத்தை இயக்கி சாகசம் செய்தார். இதில் ரஃபேல், சுகோய் உள்ளிட்ட போர் விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |