Categories
தேசிய செய்திகள்

குடியரசு தின விழா அணிவகுப்பு – 25,000 பேருக்‍கு மட்டுமே அனுமதி..!!!

கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக குடியரசு தின அணிவகுப்பில் 15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனுமதியில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குடியரசு தினவிழாவை பார்வையிட வழக்கமாக ஒரு லட்சத்து 15 ஆயிரம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக 25 ஆயிரம் பேர்  மட்டுமே அனுமதிக்கப்படுவர். மேலும் 15 வயதுக்கு கீழ்  உள்ள குழந்தைகளுக்கு அனுமதியில்லை என்றும் நிகழ்ச்சி முடியும்வரை முக கவசம் அணிவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலாசார நிகழ்ச்சிகளும் குறைக்கப்பட்டுள்ளன. குடியரசு தின அணிவகுப்பானது விஜய் சௌக்கில் ஆரம்பித்து தேசிய மைதானத்தில் முடிவடையும். கொரோனோ காரணமாக  அணிவகுப்பின் நீளமும் 8 கிலோ மீட்டரில் இருந்து 3 கிலோமீட்டர் ஆக குறைக்கப்பட்டுள்ளது. அணிவகுப்பு நடக்கும் இடத்தில் ஒவ்வொரு நுழைவு வாயிலும் தெர்மல் ஸ்கேனிங்   செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Categories

Tech |