குடியரசு தின விழாவிற்காக தமிழ்நாடு சார்பாக அனுப்பப்பட்ட ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக ஸ்டாலின் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
குடியரசு தின விழாவில் தமிழக அரசை பறைசாற்றும் விதமாக அனுப்பப்பட்ட ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி டெல்லி ராஜபாதையில் நடைபெறும் முப்படைகளின் அணிவகுப்பு மற்றும் அனைத்து மாநிலங்களின் கலாச்சாரங்களை குறிக்கும் வகையில் அந்தந்த மாநிலம் சார்பாக ஊர்திகள் அனுப்பி வைக்கப்படும். அதேபோல் இந்த ஆண்டும் நாட்டின் விடுதலைக்காக போராடிய பாரதியார், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் உள்ளிட்ட தலைவர்களின் படங்களுடன் ஊர்தி ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் இந்த ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து மிகவும் பிரபலமான தேசியத் தலைவர்களின் புகைப்படங்கள் இருந்தால் மட்டுமே அந்த ஊர்தியை அனுமதிப்போம் எனவும் வேலுநாச்சியார் ,மகாகவி பாரதி போன்ற தேசத் தலைவர்களை யாருக்கும் தெரியாது என்றும், இதனால் இவர்களின் புகைப்படங்கள் இடம் பெற்ற ஊர்திகளை அனுமதிக்க மாட்டோம் எனவும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
அதோடு மட்டுமல்லாமல் கேரளா, மேற்குவங்காளம் போன்ற தென்மாவட்டங்கள் ஒட்டுமொத்தமாக இந்த விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் தொடர்ந்து கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பாக ஸ்டாலின் மோடிக்கு தனது கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். ஆனால் இவ்வளவு தாமதமாக இந்த கடிதம் அனுப்பி வைக்கப்படுவது ஏன்…? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். குடியரசு தின விழாவில் இடம்பெறும் ஊர்திகள் மற்றும் அவற்றில் இடம்பெறும் படங்கள் குறித்து 6 மாத காலத்திற்கு முன்பாகவே மத்திய அரசு அனைத்து விபரங்களையும் திரட்டி விடும்.
இதற்காக டிசம்பர் மாதம் இறுதி முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும். ஆனால் இந்த ஆறு மாத காலமாக ஸ்டாலின் இதைப் பற்றி பேசாமல் தற்பொழுது இவ்வளவு தாமதமாக கடிதம் எழுதுவது ஏன்..?? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பல்வேறு காரணங்களால் சில ஊர்திகள் நிராகரிக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். இதேபோல் சென்ற ஆண்டும் கொரோனா காரணமாக ஊர்திகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மேலும் பிரபல தலைவர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தால் தான் அனுமதிப்போம் எனவும் வேலுநாச்சியார், வா. உ .சி போன்ற தலைவர்களை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது எனவும் மத்திய அரசு கூறியுள்ளது கண்டிக்கத்தக்கது.
வைரஸ் பரவல் காரணமாக சர்வதேச தலைவர்கள் யாரும் இடம்பெறவில்லை என ஏற்கனவே மத்திய அரசு அறிவித்திருந்தது அவ்வாறு இருக்கையில் இவர்களின் படங்களை அறியாமல் இருக்கப்போவது யார்…? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்தியர்கள் அனைவருக்கும் வேலுநாச்சியார் மற்றும் மகாகவி பாரதி போன்றோரின் தியாகங்கள் பற்றி தெரியும், இவர்களின் புகைப்படங்கள் இடம் பெற்ற ஊர்திகளை நிராகரிப்பது இவர்களின் தியாகங்களை கொச்சைப்படுத்துவதற்கு சமம் எனக் கூறியுள்ளனர். இதேபோல் கர்நாடகாவை எடுத்துக்கொண்டால் அங்குள்ள மக்களின் உணர்வுகளை எடுத்துச் சொல்வதற்கு ஏற்ற பாஜக தலைவர்கள் அங்கு உள்ளனர். ஆனால் தமிழகத்திலோ நிலைமை தலைகீழாக உள்ளது இங்குள்ள தலைவர்கள் மத்திய அரசின் வார்த்தைக்கு மறு வார்த்தை பேசாத தலைவர்களாக உள்ளனர் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.