நேற்று நாடு முழுவதும் 73-வது குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உட்பட அனைவரும் இந்த விழாவில் பங்கேற்றனர். அதோடு மட்டுமில்லாமல் இந்த விழாவில் தமிழகத்திலிருந்து விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களின் படங்கள், சிலைகள் அடங்கிய ஊர்தி அணிவகுப்புகளும் இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், குடியரசு நாள் அணிவகுப்பில் இடம் பெற்றிருந்த தமிழக அரசின் அலங்கார ஊர்திகளில் இந்திய விடுதலைக்காக பாடுபட்ட வட தமிழகத்தை சேர்ந்த தலைவர்களுடைய உருவச் சிலை இடம் பெறாதது ஏமாற்றம் அளித்ததாக தெரிவித்துள்ளார்.