குடியிருப்பாளர் கூட்டத்தில் நடத்தப்பட்ட திடீர் துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலி தலைநகர் ரோமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் குடியிருப்பாளர்கள் இணைந்து கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்டத்தில் எதிர்பாராதவிதமாக திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட தொடங்கியுள்ளார். இந்த கோர சம்பவத்தில் மூன்று பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் சிலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.