Categories
உலக செய்திகள்

குடியிருப்பில் பற்றி எறிந்த தீ.. விவேகமாக செயல்பட்டு குழந்தையை காப்பாற்றிய இளைஞர்கள்.. குவியும் பாராட்டுக்கள்..!!

பிரான்சில் தீ பற்றியெரிந்த குடியிருப்பில் சிக்கிய மக்களை காப்பாற்றிய புலம்பெயர்ந்த இளைஞர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

பிரான்சில் உள்ள Nantes என்ற நகரில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாம் தளத்தில் திடீரென்று தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் பதறிய அப்பகுதி அக்கல் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஒரு குழந்தை அந்த குடியிருப்பில் மாட்டிக் கொண்டதால் அந்த பகுதியில் வசிக்கும் புலம்பெயர்ந்த சில இளைஞர்கள் சிறிதும் தாமதிக்காமல் ஜன்னலை பற்றிக்கொண்டு வேகமாக ஏறி அந்த குடியிருப்பில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டிருக்கின்றனர்.

அதன் பின்பு 6 மாத குழந்தையை தரையில் மெத்தைகளை மேலிருந்து வீசும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அக்குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. எனினும் தற்போது குழந்தை குணமடைந்து வருவதாக தெரியவந்துள்ளது. மேலும் பொதுமக்கள் தைரியம் மற்றும் விவேகமாக செயல்பட்ட இளைஞர்களை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

மேலும் தீப்பற்றி எறிந்த குடியிருப்பிலிருந்து மக்களை காப்பாற்றிய நபர்களில் புலம்பெயர்ந்தவர்கள் மூவர். எனவே பிரான்சின் ஜனாதிபதியான இம்மானுவேல் மேக்ரோனிற்கு இணையதளம் வழியாக மனு ஒன்றை உருவாக்கி , அந்த இளைஞர்களுக்கு குடியுரிமை வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |