Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

குடியிருப்புகள் நிறைந்த பகுதி…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

இரும்பு கடையில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரிய கடை சௌராஷ்டிரா தெருவில் பெருமாள் என்பவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். அதிகாலை 4 மணி அளவில் பெருமாளின் கடையில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கடையில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர்.

ஆனால் இந்த தீ விபத்தில் 2 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டது. இதுகுறித்து பெருமாள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கடையை சுற்றிலும் குடியிருப்பு பகுதிகள் இருப்பதால் தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Categories

Tech |