Categories
உலக செய்திகள்

குடியிருப்புக்குள் சீறி பாய்ந்த குண்டு…. இளவயது சிறுமி துடி துடித்த கொடூரம்…. மியான்மரில் பரபரப்பு…!!

மியான்மர் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 வயது சிறுமி பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மியான்மர் ராணுவம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்நாட்டில் நடைபெற்று கொண்டிருந்த மக்களாட்சியை கைப்பற்றியுள்ளது. மேலும் மியான்மர் ராணுவம் அந்நாட்டின் முக்கிய தலைவர்களையும் சிறை வைத்துள்ளது. இதனால் மியான்மர் மக்கள் ராணுவ ஆட்சியை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை அடக்குவதற்காக மியான்மர் ராணுவம் அவ்வப்போது துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றது. மேலும் மியான்மரில் இதுவரை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 20 சிறுவர்கள் உட்பட 164 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஆனால் அந்நாட்டின் மனித உரிமை ஆணையம் மியான்மரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் அதிக எண்ணிகையிலானா மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 17 குழந்தைகளை சிறை வைத்திருப்பதாகவும், 60க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்களை ராணுவம் கைப்பற்றியுள்ளதாகவும் கூறியுள்ளது. இந்நிலையில் ராணுவத்தை எதிர்த்த மியான்மர் மக்கள் மண்டேலா என்ற பகுதியில் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இந்த போராட்டத்தை அடக்குவதற்க்காக ராணுவம் அப்பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. அப்போது துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு அப்பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் இருந்த 7 வயது சிறுமியின் மீது பாய்ந்துள்ளது. இதனால் அச்சிறுமி துடி துடித்து சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் மியான்மர் ராணுவம் இதுவரை நடத்திய துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களில் இவர் தான் மிகவும் இளையவர் என்ற தகவல் கிடைத்துள்ளது.

Categories

Tech |