கோவை மாவட்டம் வால்பாறையில் பல எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சக்தி எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் காட்டுயானைகள் புகுந்தது. அவை திடீரென தொழிலாளர்களின் வீடுகளின் சுவரை இடித்து சேதப்படுத்தி அட்டுழியம் செய்தது. இதனையடுத்து யானைகள் அந்த வீட்டிலிருந்த உணவுபொருட்களை எடுத்து சாப்பிட்டது. அதன்பின் வீட்டுக்குள் இருந்த பொருட்களை எடுத்து வீசி சேதப்படுத்திது. இது தொடர்பாக தகவலறிந்த நகராட்சி தலைவர் அழகுசுந்தர வள்ளி அதிகாரிகளுடன் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அத்துடன் நகராட்சி நிர்வாகம் சார்பாக நிவாரண பொருட்களை வழங்கினார். அதனை தொடர்ந்து அவர் அப்பகுதியில் நடமாடும் காட்டுயானைகள் குடியிருப்புக்குள் நுழையாமல் கண்காணிக்குமாறு வனத்துறையினரை கேட்டுக்கொண்டார். பின் மழை காரணமாக பாதிக்கப்பட்ட இடங்களையும், அங்குள்ள பள்ளி சத்துணவு கூடங்களையும் பார்வையிட்டு உடனே பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். இதேபோன்று வால்பாறையில் மழை காரணமாக வீடுகள் சேதமடைந்தவர்களுக்கு நிவாரணம் பொருட்களை நகராட்சி தலைவர் வழங்கினார்.