உக்ரைனுக்கு அருகாமையில் அமைந்துள்ள குடியிருப்பு கட்டிடத்தில் மீது ராணுவ விமான மோதி விபத்து ஏற்பட்டதில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ரஷ்யாவின் தென்மேற்கே உக்ரைனுக்கு அருகாமையில் அமைந்துள்ள எய்ஸ்க் நகரில் ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் மீது ரஷ்ய இராணுவ விமானம் ஒன்று நேற்று திடீரென தீப்பிடித்தபடி பறந்து வந்து மோதி விபத்திற்கு உள்ளானது. இதனை தொடர்ந்து கட்டிடத்தில் முதல் தளத்திலிருந்து ஒன்பதாவது தளம் வரை தீப்பற்றி உள்ளது. இந்த விபத்தில் அனைத்து தளங்களிலும் உள்ள குடியிருப்புகள் சேதமடைந்துள்ளது அங்கிருந்து சுமார் 3,600 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர் விமானத்தில் இருந்த விமானி குதித்து தப்பித்து சென்று விட்டார். இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும் 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருப்பதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விசாரணையில் சுகோய் 34 ரக ஜெட் போர் விமானத்தின் எஞ்சினில் தீப்பிடித்த நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இந்த நிலையில் இந்த கோர விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. 19க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றார்கள் என மீட்பு படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.