Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடி…. அச்சத்தில் பொதுமக்கள்…. வெளியான சிசிடிவி காட்சிகள்…!!

குடியிருப்பு பகுதிக்குள் கரடி உலா வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி நகரின் மையப்பகுதியான மார்க்கெட் அருகே இருக்கும் புது அக்ரஹாரம் தெருவில் நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி உலா வந்தது. இதனை பார்த்த தெருநாய்கள் குரைத்தபடி அங்கும் இங்கும் ஓடியது. இந்நிலையில் கரடி எட்டின்ஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரிந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இவ்வாறு கரடி அங்குமிங்கும் உலா வந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கரடியின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் பணி முடிந்து இரவு நேரம் வீடு திரும்புபவர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுத்தை ஊருக்குள் நுழைந்து நாய்களை கவ்வி சென்றது. எனவே கரடியின் நடமாட்டத்தை கண்காணித்து வனத்துறையினர் அதனை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |