Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் காட்டு பன்றிகள்”…. பயத்தில் உள்ள பொதுமக்கள்… நடவடிக்கை எடுக்க கோரிக்கை….!!!!

வால்பாறை குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் காட்டுப் பன்றிகளால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பயத்தில் உள்ளார்கள்.

கோவை மாவட்டம், வால்பாறை அருகில் வனப்பகுதியில் காட்டெருமை, புலி, சிறுத்தை, யானை உட்பட பல்வேறு வகையான வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றது. அதில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தேயிலை தோட்டம், குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றது. இதன்காரணமாக வனவிலங்குகள் தாக்குதலுக்கு ஆளாகி உயிர் இழப்பும் ஏற்படுகின்றது. இந்நிலையில் வால்பாறை குடியிருப்பு பகுதியில் காட்டுப்பன்றி, சிறுத்தை நடமாட்டம் அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக எம்.ஜி.ஆர் நகர், அண்ணா நகர், வாழைத்தோட்டம், கக்கன்காலனி, சிறுவர் பூங்கா ஆகிய பகுதிகளில் இரவு மட்டுமல்லாது பகலிலும் காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகமாக இருக்கின்றது.

இதனால் முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு பயப்படுகின்றார்கள். அதோடு மட்டுமல்லாது காட்டுப்பன்றிகள் சண்டை போட்டு சத்தமிட்டு ஓடுவதால் பொதுமக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் குடியிருப்பு பகுதியில் துப்புரவு பணியாளர்கள் சேகரித்து வைத்த குப்பைகளை கிளறி விடுகின்றன. இதனால் குப்பைகள் காற்றில் பறந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகின்றது. அதோடு மட்டுமல்லாது காட்டுப்பன்றிகள் சாலையில் சுற்றி திரிவதால் விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. கேரளா மாநிலத்தில் பொது மக்களுக்கு இடைஞ்சலாக, பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை சுட்டு கொல்ல அனுமதி வழங்கப்பட்டது. அதேபோன்று வால்பாறையில் குடியிருப்பு பொதுமக்களுக்கு பயமுறுத்தி சுற்றித்திரியும் காட்டுப்பன்றிகளை வனத்துறை சார்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Categories

Tech |