Categories
தேசிய செய்திகள்

குடியுரிமைக்கு மத சான்றிதழ் அவசியம்

இந்திய குடியுரிமையை பெற விண்ணப்பிப்போர் தாங்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இதுதொடர்பான ஆணை விரைவில் வெளியிடப்படும்என்று உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். குடியுரிமை சட்டம் கடந்த ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி பாகிஸ்தான் வங்கதேசம் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளில் இருந்து 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 முன்னர் இந்தியாவிற்கு வந்த ஆறு மதத்தவர்கள் சட்டவிரோதம் கூடியவர்களாக கருதப்பட மாட்டார்கள் என அறிவித்துள்ளது இதில் இஸ்லாமியர்கள் சேர்க்கப்படவில்லை.

மேல் குறிப்பிட்டுள்ள இந்த மூன்று நாடுகளில் இருந்து வரும் இந்துக்கள், பவுத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் தங்கள் மத சான்றிதழை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அப்போதுதான் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் குடியேறியவர்களுக்கு தனி விதிமுறைகள் சேர்க்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் கூறியிருக்கிறது.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |