Categories
மாவட்ட செய்திகள்

‘குடியுரிமையை ரத்து செய்து கருணைக்கொலை செய்யுங்கள்’…. மாவட்ட ஆட்சியரிடம் திருநங்கை கண்ணீர் மல்க மனு….!!

தேனி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது தேனி பாரஸ்ட்ரோடு 6 வது தெருவை சேர்ந்த திருநங்கை ஆராதனா என்பவர் கண்ணீர் மல்க ஒரு மனுவை கொடுத்தார். இவர் தேனி ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார். அவர் கொடுத்த மனுவில், “நான் 2018 ஆம் ஆண்டு கோர்ட் உத்தரவின்படி இரண்டாம் நிலை காவலர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன்.

ஆனல் அடுத்த கட்ட தேர்வுக்கு இதுவரை அழைப்பு வரவில்லை. தேர்வில் வெற்றி பெற்றும் எனக்கான அங்கீகாரம் கிடைக்காது மிகுந்த வேதனை அளிக்கிறது. உயரதிகாரிகளிடம் கடந்த 4 ஆண்டுகளாக மனு அளித்தும் என் மீது கருணை காட்ட வில்லை. எனவே போலீசாக வேண்டும் எனது கனவை நிறைவேற்றி தர வேண்டும். இல்லையெனில் எனது குடியுரிமை ரத்து செய்து என்னை கருணைக்கொலை செய்து விடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு கொள்கிறேன்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |