குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு, இந்து பெண் ஒருவருக்கு வளைகாப்பு நடத்தினர்..!
சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தின் போது வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.. சென்னையில் ஷாயின்பாக் என கூறி கடந்த 14 நாட்களாக வண்ணாரப்பேட்டையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தின்போது அப்பகுதியை சேர்ந்த பாக்கியலட்சுமி என்ற கர்பிணிக்கு, இந்து முறைப்படி வளைகாப்பு நடைபெற்றது.
போராட்டத்தில் பங்கேற்று இருந்த இஸ்லாமிய பெண்கள் வளையல் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். வளைகாப்பு நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட தாம்பூலப் பையில் “இஸ்லாமியர்கள் எங்கள் தொப்புள் கொடி உறவுகளே” என்ற வாசகம் குறிப்பிட பட்டிருந்தது. சி.ஏ.ஏ, என்.ஆர்.சி,என்.பி.ஆர் க்கு எதிரான வாசகங்களும் குறிப்பிட்டிருந்தது.