குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணையில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையர் தன்னையும் இணைந்து கொள்ள அனுமதிக்கும் படி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் இந்த வழக்குகளில் தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டு இடையீட்டு மனு ஒன்றை ஐநாவின் மனித உரிமைகள் ஆணையம் தாக்கல் செய்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் இஸ்லாமியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பது பரவலாக எழுப்பப்படும் குற்றச் சாட்டாகும்.
அத்துடன் இஸ்லாமியர்களை குறிவைத்து குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதாக ஈரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணையில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையர் தன்னையும் இணைந்து கொள்ள அனுமதிக்கும் படி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
Raveesh Kumar, MEA: The Citizenship Amendment Act is an internal matter of India and concerns the sovereign right of the Indian Parliament to make laws. We strongly believe that no foreign party has any locus standi on issues pertaining to India’s sovereignty. (2/4) https://t.co/XKpX2qiuqb
— ANI (@ANI) March 3, 2020
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார், இந்தியக் குடியுரிமை தொடர்பாக சட்டங்களை இயற்ற இந்திய நாடாளுமன்றத்துக்கு முழுமையான, கட்டுப்பாடு இல்லாத உரிமைகள் உண்டு. இந்தியாவின் இறையாண்மையில் குறுக்கிடுவதற்கு வேறு எந்த வெளி அமைப்புக்கும் உரிமையில்லை என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
குடியுரிமை திருத்த சட்டம் இந்திய அரசியலமைப்பின்படி செல்லுபடியாகும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்திய அரசியல் சட்ட மதிப்பீடுகளின்படி தேவையான அனைத்தும் கொண்டதாக இந்திய குடியுரிமை திருத்த சட்டம் அமைந்துள்ளது. சட்டவிதிகளின் படி நிர்வகிக்கப்படும் ஒரு ஜனநாயக நாடு இந்தியா. நீதித்துறை மீது நாங்கள் அனைவரும் மிகுந்த மரியாதை மற்றும் முழு நம்பிக்கை வைத்திருக்கிறோம்.எங்களது சட்டபூர்வமான நிலைப்பாடு உச்சநீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்படும் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.