Categories
தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பிரதமர் மோடியிடம் நான் எதுவும் பேசவில்லை : அதிபர் ட்ரம்ப்!

இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடியுடன் இன்று டெல்லி இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்த இந்தியா-அமெரிக்கா இடையே 3 ஒப்பந்தங்கள் பிரதமர் மோடி – அதிபர் ட்ரம்ப் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையில் ரூ.21 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அமெரிக்காவில் இருந்து எண்ணெய் ஏரிவாயு இறக்குமதி செய்ய ரூ.14,20,000 கோடிக்கு ஒப்பந்தமாகியுள்ளது. மேலும் அமெரிக்காவின் ராணுவ ஆயுதங்கள், அப்பாச்சி மற்றும் ரோமியோ ஹெலிகாப்டர்களை இந்தியாவிற்கு தர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிபர் டிரம்ப், நான் மீண்டும் அமெரிக்க அதிபரனால் பங்குச்சந்தை வளர்ச்சி அடையும் என கூறினார்.

அமெரிக்க அதிபராக வேறொருவர் இருந்தால் இந்தியர்களின் தொழில் வாய்ப்புகள் கடுமையாக பாதிக்கும், நான் மீண்டும் அதிபர் ஆகாவிட்டால் இரும்பு மற்றும் அலுமினியத்துறை கடும் வீழ்ச்சியை சந்திக்கும் என்று தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் 99% மக்கள் அமைதியையே விரும்புகின்றனர். பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை என்னை விட யாரும் கூடுதலாக எடுத்ததில்லை என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து இந்தியாவில் மத சுதந்திரம் சிறப்பாக இருப்பதாக பிரதமர் மோடி என்னிடம் கூறினார் என்றும் மத சுதந்திரத்திற்கு பிரதமர் மோடி ஆதரவாக இருக்கிறார், பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடம் பேசியதிலிருந்து மத சுதந்திரம் குறித்து எதிர்மறை கருத்து ஏதும் வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பிரதமர் மோடியிடம் நான் எதுவும் பேசவில்லை என அதிபர் ட்ரம்ப் தகவல் அளித்துள்ளார்.

Categories

Tech |