சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய கோரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார்.
சட்டமன்றத்தில் இன்று பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன், ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நலத் துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.. இந்நிலையில் சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய கோரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார்..
சி.ஏ.ஏ சட்டத்தை ரத்து கோரும் தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசியதாவது, ஒன்றிய அரசு 2019 ஆம் ஆண்டு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம், அரசியலமைப்புச் சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கும், மதநல்லிணக்கத்திற்கும் உகந்ததாக இல்லை என்று பேரவை கருதுகிறது..
குடியுரிமை திருத்தச் சட்டம், அகதிகளாக வருபவர்களை அவர்களின் நிலை கருதி அரவணைக்காமல் மத ரீதியாகவும், எந்த நாட்டிலிருந்து வருகிறார்கள் என்பதைப் பொருத்தும் பாகுபடுத்திப் பார்க்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.. சிஏஏ சட்டம் இலங்கை தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம் என்று அவர் குற்றச்சாட்டினார்..