குடும்பத்தகராறு கணவன் மனைவியை தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் கருப்புசாமி-சண்முகலட்சுமி தம்பதியினர். நேற்று சண்முகலட்சுமிக்கும் கருப்புசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த கருப்பசாமி சண்முகலட்சுமியை தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டார். அதன் பிறகு மனைவி இறந்ததை பார்த்ததும் அங்கிருந்து தப்பிச் சென்றார். இந்நிலையில் பூட்டிய வீட்டில் சண்முகலட்சுமி இறந்து கிடக்க இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
விரைந்து வந்த காவல்துறையினர் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். அதில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் சண்முகலட்சுமியின் கணவன் அவரை கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் கருப்புசாமி மீது வழக்குப் பதிந்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். நேற்று முன்தினமே இவர்கள் அந்த வீட்டுக்கு வாடகைக்கு குடி வந்தது குறிப்பிடத்தக்கது.