மும்பையை சேர்ந்தவர் சுக்ராம். இவர் தினமும் குடித்துவிட்டு மனைவியை அடித்து தகராறு செய்து வந்துள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில் தினமும் வீட்டில் சண்டைபோட்டு வந்தது மகன்களுக்கு தந்தை மீது வெறுப்பு மற்றும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சுக்ராம் வழக்கம்போல் குடித்துவிட்டு மனைவியை அடித்து கொடுமை செய்துகொண்டிருந்ததை கண்ட அவரது மகன் சுத்தியலால் சுக்ரமை தாக்கினார்.
இதில் பலத்த காயமடைந்த சுக்ராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் தானே காவல் நிலையத்திற்கு சென்று நடந்தவற்றை கூறி சரணடைந்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து சுக்ராமின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுவனுக்கு 18 வயது பூர்த்தி ஆகாததால் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார். தாயை கொடுமை செய்ததை தாங்க முடியாமல் மகன் தந்தையை கொன்ற சம்பவம் அப்பகுதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.