பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடரில் வைத்து 2 பெண் எம்.பிகளுக்கிடையே சர்ச்சைக்குரிய நிதி மசோதாவின் மீதான வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தற்போது மழை காலத்திற்கான கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் வைத்து சர்ச்சைக்குரிய நிதி மசோதாவின் மீதான வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டை ஆளும் கட்சியை சேர்ந்த பெண் எம்.பியான சாலா சைபி என்பவருக்கும், மற்றொருவருக்குமிடையே சர்ச்சைக்குரிய நிதி மசோதாவின் மீதான வாக்குவாதம் முற்றியுள்ளது.
இதனையடுத்து இரு பெண் எம்.பிக்களும் வாக்குவாதத்தை தொடர்ந்து கைகலப்பில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த சம்பவத்தால் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியுள்ளது.