Categories
தேசிய செய்திகள்

“குடும்பக் கட்டுப்பாடு செஞ்சாச்சு”இப்போ எங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும்…. மருத்துவரின் முயற்சியால்…. மீண்டும் குழந்தை பெற்ற 43 வயது பெண்…!!

பெண் ஒருவர் குடும்ப கட்டுப்பாடு சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் குழந்தை பெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் தார்வார் மாவட்டத்தை சேர்ந்த தம்பதிகள் சந்திரப்பா(50) – ஷோபா காவேரி(43).  இந்த தம்பதிகளுக்கு 19 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. பின்னர் ஷோபா கர்ப்பமாகி பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். இதையடுத்து ஒரு குழந்தை போதும் என்று குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் தனது ஒரே மகளை  மிகவும் பாசமாக வளர்த்து வந்துள்ளனர். 18 வயதான அவர்களின் மகள் கடந்த ஓராண்டுக்கு முன்பு இரத்த சோகையின் காரணமாக உயிரிழந்துள்ளார்,

இதனால் அத்தம்பதிகள் இருந்த ஒரு மகளும் இறந்துவிட்டாள் என்று வேதனை அடைந்துள்ளனர். பின்னர் மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள நினைத்தபோது குடும்பக்கட்டுப்பாட்டு செய்ததால் குழந்தை பெறுவதில் சிக்கல் என்று நினைத்துள்ளனர். பின்னர் இதுகுறித்து இத்தம்பதிகள் உப்பள்ளி சிட்டிக்குப்பி அரசு மருத்துவமனையின் டாக்டர் ஸ்ரீதர் என்பவரிடம் ஆலோசனை கேட்டுள்ளனர்.

இதையடுத்து நம்பிக்கை கூறிய மருத்துவர் கொடுத்த சிகிச்சையின் மூலமாக ஷோபா கர்ப்பமாகியுள்ளார். இதனால் அவரின் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இந்நிலையில் சில தினங்களுக்கு ஷோபாவிற்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதையடுத்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு பிறகு செய்த பிறகு குழந்தை பிறக்க வைத்த செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இந்நிலையில் 43 வயது பெண் மீண்டும் குழந்தை பெற்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Categories

Tech |