Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு குழந்தை இல்ல…. மன உளைச்சலில் கணவர் எடுத்த விபரீத முடிவு…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

நாமக்கல் மாவட்டத்தில் குடும்பத் தகராறில் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள சின்னபெத்தாம்பட்டி பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்தார். கூலித் தொழிலாளியாக பணிபுரிந்த இவருக்கு திருமணமாகி பேபி என்ற மனைவி இருக்கிறார். இத்தம்பதிகளுக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மன உளைச்சலில் காணப்பட்ட குமார் வீட்டிற்கு அருகிலுள்ள மரத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |