சேலம் மாவட்டத்தில் குடும்பத்தகராறில் மாமனாரை மருமகளின் குடும்பத்தினர் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள பள்ளிப்பட்டி பகுதியில் கோவிந்தன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி பானுமதி என்ற மனைவியும் தமிழ் செல்வி என்ற மகள் மற்றும் செல்வக்குமார், கலையரசன் என்ற 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் செல்வகுமார் அதே பகுதியில் வசிக்கும் தமிழ் நிதி என்பவரின் மகள் சவுந்தர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதனால் இரு குடும்பத்துக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சவுந்தர்யாவின் தந்தை தாய் மற்றும் அண்ணன் தம்பி ஆகிய 4 பேரும் சவுந்தர்யாவின் வீட்டிற்கு சென்று வீட்டிலிருந்த கோவிந்தனை அரிவாளால் வெட்டியுள்ளார்கள். இதில் படுகாயமடைந்த கோவிந்தனை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் கோவிந்தன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுக்குறித்து போலீசார் தமிழ் நிதி குடும்பத்தை கைது செய்ததுடன் அவர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.