Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“குடும்பத்தகராறு” மனைவி எடுத்த விபரீத முடிவு…. பரிதவிக்கும் 2 வயது மகள்…. பெரும் சோகம்….!!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மயிலக்கோயில் கிராமத்தை சேர்ந்த இலக்கியா (28) என்பவருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியராஜன் (35) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு இதழினி (2) என்ற பெண் குழந்தை இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் பாண்டியராஜன் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டு கள்ளக்குறிச்சிக்கு திரும்பியுள்ளார். அப்போது கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு காரணமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இலக்கியா மயிலகோயில் பகுதியில் உள்ள தன்னுடைய தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென பாண்டியராஜனிடம் இருந்து இலக்கியாவுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த இலக்கியா வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது தொடர்பாக கொள்ளிடம் காவல் துறையினருக்கு அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர்  இலக்கியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |