Categories
மாநில செய்திகள்

குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1,000….. தமிழகத்தில் பரபரப்பு தகவல்…..!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டு இருந்த அனைத்து நலத் திட்டங்களையும் ஒவ்வொன்றாக செய்து கொண்டே வருகிறார்.

அதன்படி குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த நிலையில், அந்த உதவித் தொகை பெற ரேஷன் கார்டுகளில் குடும்பத் தலைவி பெயரை மாற்ற ஏராளமானோர் விண்ணப்பிக்கின்றனர். ஆனால் இதற்காக குடும்பத்தலைவியாக பெயர் மாற்றம் செய்ய தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் PHH, PHH-AAY, NPHH ஆகிய மூன்று வகை குறியீடு உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Categories

Tech |