Categories
மாநில செய்திகள்

குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000….. யாருக்கெல்லாம்…? எப்போது கிடைக்கும்…? முழு விவரம் இதோ…!!!!

திமுக தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மாதம் ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டம் தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு கொடுக்கப்படும் என்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு 7 மாதங்கள் கடந்ததும் கடந்த நிலையிலும் இன்னும் செயல்படுத்தப் படாததால் எப்போது செயல்படுத்தப்படும் என்று மக்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த அறிக்கையை தயார் செய்யுமாறு முதல்வர் முக ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தற்போது நிலவி வரும் நிதி பற்றாக்குறையின் காரணமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 1000 நிதி வழங்க இயலாது என்று கூறப்படுகின்றது.

எனவே PPH, PPH- AAY மற்றும் NPHH ஆகிய 3 குறியீடுகளை கொண்டிருக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்றும், NPHH-S மற்றும் NPHH-NC குறியீடு இருக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிதியுதவி வழங்கப்படாது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே போல அரசு ஊழியர்கள், சொந்த வீடு வைத்திருப்பவர்கள், வருமான வரி செலுத்துபவர்களுக்கு இந்த பணம் கிடைக்காது. மேலும் விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், குழந்தை இல்லாதவர்களுக்கு ரூ.1,000 நிதி உதவி கிடைக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |