ராட்சத அலையில் சிக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்திலுள்ள பொன்னை ராமர் கோவில் தெருவில் முரளி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லோகேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசித்து வரும் தனது நண்பர் சுரேஷ் என்பவரின் உறவினர்களோடு வேளாங்கண்ணிக்கு சுற்றுலா பயணம் சென்றுள்ளார். அங்கு சந்தோஷ் மற்றும் லோகேஷ் இருவரும் கடலில் குளித்து கொண்டிருந்தபோது இருவரையும் ராட்சத அலை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதனை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் சந்தோஷை உடனடியாக மீட்டனர். ஆனால் லோகேஷை அலை அடித்துச் சென்றது.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் லோகேஷை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் லோகேஷின் சடலம் கரையொதுங்கியுள்ளது. அதன்பின் காவல்துறையினர் லோகேஷின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் உயிருடன் மீட்கப்பட்ட சந்தோஷுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.