Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சனை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சனையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் சர்வமான்ய அக்ரஹாரம்  பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில்  சரவணனுக்கு அவரது  குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மன உளைச்சலில் இருந்த சரவணன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரவணனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |