Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினை…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சினையில் விவசாயி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நாரணமங்கலம் கிராமத்தில் விவசாயியான சுரேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சுரேஷ்குமார் வீட்டில் வைத்து உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்துள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த சுரேஷ்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுரேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |