Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினை…. பெண் எடுத்து விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சினையில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மீனாப்புர் கிராமத்தில்  பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில்  கவிதாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கவிதா வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து மயங்கிய நிலையில் இருந்த கவிதாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கவிதா  பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |