விருதுநகர் மாவட்டம் அச்சம் குளத்தில் பட்டாசு ஆலை விபத்தில் 12 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
மேலும் விபத்தில் படுகாயமடைந்த அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் முதலமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்கவும் முதலமைச்சர் குறிப்பிட்டு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். முன்னதாக பிரதமர் மோடி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2லட்சம் வழங்க உத்தரவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.