தம்பியை அரிவாளால் வெட்டிய அண்ணனுக்கு நீதிமன்றம் 1 வருட ஜெயில் தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அய்யங்கொலி பகுதியில் சூர்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தாமஸ் மற்றும் வர்கீஸ் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். கடந்த 2008-ஆம் ஆண்டு சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த தாமஸ் தனது தம்பியான வர்கீசை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த வர்கீசை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தாமசை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் குற்றவாளியான தாமஸுக்கு 2,000 ரூபாய் அபராதமும், 1 வருட ஜெயில் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.