Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. தம்பியின் வெறிச்செயல்…. அதிரடி உத்தரவிட்ட நீதிபதி….!!!!

அண்ணனை கொலை செய்த தம்பிக்கு  ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார் 

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தலையாமங்கலம் ஏத்தக்குடி கீழகுடியிருப்பு பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்குமார் என்ற அண்ணன் இருந்துள்ளார். இந்நிலையில் விஜயகுமார் கடந்த  2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 28-ஆம் தேதி தனது மனைவியிடம் குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு செய்துள்ளார். அப்போது அங்கு வந்த ராஜ்குமார் தட்டிக்கேட்டுள்ளார் . இதனால் ஆத்திரம் அடைந்த  விஜயகுமார் வீட்டில் இருந்த இரும்பு  ஈட்டியை  கொண்டு ராஜ்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த  ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதுகுறித்து  வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஜயகுமாரை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சாந்தி  சொந்த அண்ணனை கொலை செய்த விஜயகுமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அதிரடியாக  உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |