Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. வாலிபரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சித்தார்த்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குழந்தை பாதுகாப்பு அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வளர்மதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை இருக்கிறான். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்த சித்தார்த்தன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதற்கு முன்னதாக சித்தார்த்தன் தனது குழந்தையின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தியதால் குழந்தை மயங்கிய நிலையில் கிடந்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சித்தார்த்தன் மற்றும் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சித்தார்த்தனை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதன்பிறகு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |