தம்பி அண்ணனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள அரியமங்கலம் பகுதியில் காவலாளியாக கார்மேகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வெங்கடேசன் என்ற தம்பி இருக்கிறார். இந்நிலையில் அண்ணன் தம்பிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த வெங்கடேசன் தனது அண்ணனை பிடித்து கீழே தள்ளியதால் இரும்பு கதவில் மீது கார்மேகத்தின் தலை மோதி விட்டது.
இதனால் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கார்மேகம் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வெங்கடேசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.