Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை…. கருகிய நிலையில் மீட்கப்பட்ட வாலிபர்…. தூத்துக்குடியில் சோகம்…!!

வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாயர்புரம் பகுதியில் லாரி டிரைவரான டைசான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் மன உளைச்சலில் இருந்த டைசான் உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து கருகிய நிலையில் கிடந்த டைசானை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் டைசான் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |