பாஜக ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
அதுமட்டுமன்றி தாங்கள் போட்டியிட விரும்பும் ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக வேட்புமனு பரிசீலனை நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அவ்வப்போது வெளியிட்டு கொண்டே வருகிறது.
இந்நிலையில் மேற்கு வங்காள மாநிலத்தில் பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளியிட்டது. அதில் குடும்பத்தில் ஒருவருக்கு கட்டாயம் வேலை வழங்கப்படும் என பாஜக அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் எல்கேஜி முதல் முதுகலை படிப்பு வரை மாணவிகள் பேருந்துகள் இலவசமாக பயணம் செய்யலாம். புதிய எய்ம்ஸ் மருத்துவமனை கட்டித் தரப்படும். பாஜக ஆட்சிக்கு வந்ததும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் சிஏஏ அமல்படுத்த அனுமதி வழங்கப்படும் என கூறியுள்ளது.