செங்கோட்டை அருகே குடும்ப பிரச்சனையால் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கோட்டை அருகே இருக்கின்ற பன்பொலி திருமலாபுரம் பகுதியில் வசித்து வரும் நாகராஜன் என்பவருக்கு 24 வயதில் காளிதுறை என்ற மகன் இருக்கிறான். அவர் பெங்களூருவில் இருக்கின்ற தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் தனது குடும்பத்தில் அவருக்குப் பிரச்சனை இருந்துள்ளது.
அதனால் வாழ்க்கையை வெறுத்துப் போன காளி துறை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காளி துறை உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.