பிரித்தானிய இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கு முடிந்த நிலையில் இளவரசர் ஹரி தனது குடும்பத்துடன் மீண்டும் ஒன்றுசேர்வாரா என்று எதிர்பார்க்கப்பட்டது ஏமாற்றத்தில் முடிந்துள்ளது.
பிரித்தானிய இளவரசரான ஹரி மேகன் மெர்க்கல் என்னும் அமெரிக்க கலப்பினப் பெண்ணை பல தடைகளை தாண்டி காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இதற்கு ராஜ குடும்பத்தினர் உள்ள அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் பேரும் புகழும் கிடைக்கும் என எதிர்பார்த்து ராஜ குடும்பத்திற்குள் வந்த மேகன் மெர்க்கல் ராஜ குடும்ப கட்டுப்பாடுகளை சமாளிக்க இயலாமல் இளவரசர் ஹரியை குடும்பத்தை விட்டு பிரித்து தன்னுடன் அழைத்து சென்றுவிட்டார்.
இதனால் ராஜ குடும்பத்தில் உள்ள அனைவரும் ஹரியின் மீது கோபம் அடைந்துள்ளனர். ஆனால் மகாராணியார் மட்டும் இளவரசர் ஹரியின் குடும்பத்தை மனதார வாழ்த்தியுள்ளார். இதனையடுத்து இளவரசர் பிலிப் மறைவிற்கு மீண்டும் குடும்பத்தை உறுப்பினர்களை சந்திக்கும் கட்டாயம் இளவரசர் ஹரிக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் இளவரசர் ஹரி ராஜ குடும்பத்தில் இணைய வேண்டும் என அந்நாட்டு மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
இதனைத்தொடர்ந்து தாத்தாவின் இறுதிசடங்கு முடிந்த பின் இளவரசர் ஹரி தன் தந்தை மற்றும் சகோதரருடன் நன்றாக பேசியுள்ளார். மேலும் இளவரசர் ஹரி குடும்பத்தில் இணைந்து விடுவார் என குடும்ப வட்டாரங்கள் எதிர்பார்த்த நிலையில் அவர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும்படி ஹரி மகாராணியரிடம் பேசாமலேயே அமெரிக்காவிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் இளவரசர் ஹரி மகாராணியிடம் ஏன் பேசவில்லை என்ற கேள்வியை நாட்டு மக்கள் எழுப்பிவருகின்றனர்.